இலங்கை வெளிநாட்டுத் தூதரகங்கள் ஊடாக கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளின் உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளல்
1. 2015 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தினால் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம், இலங்கையில் கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளிடமிருந்து கட்டாயமாக உயிர்மானத் தரவுகளைப் (கைவிரல் அடையாளமும், டிஜிட்டல் புகைப்படமும்) பெற்றுக் கொள்ளும் நடைமுறை, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தினால் 2015 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.
2. 2018 ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வருமாறு மேற்சொன்ன உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை, இலங்கை வெளிநாட்டுத் தூதரகங்கள் ஊடாக கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் தொடர்பிலும் அமுல் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத் தீர்மானத்தை அமுல் செய்யும் வகையில், 2018 ஜனவரிமாதம் 01 ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் இலங்கை வெளிநாட்டுத் தூதரகங்கள் ஊடாக இலங்கைக் கடவுச்சீட்டிற்காக விண்ணப்பித்து, தமக்குரிய கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டதன் பின், இலங்கைக்கு வருகை தரும் முதற் சந்தர்ப்பத்திலேயே குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்து, தமது உயிர்மானத் தரவுகளைப் (கைவிரல் அடையாளமும், டிஜிட்டல் புகைப்படமும் ) பெற்றுக் கொடுப்பது கட்டாயமாகும். இத் தேவையைப் பூர்த்தி செய்ததன் பின் மட்டுமே அவர்களுக்கு இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதி வழங்கப்படும். 16 – 60 வயதுக்குட்பட்டதாக கடவுச்சீட்டு பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரிகள் தொடர்பில் மட்டுமே இது ஏற்புடையதாகும்.
3. இலங்கை வெளிநாட்டுத் தூதரகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்:
(அ) மேலே பந்தி 2 இல் குறிப்பிடப்பட்ட தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவம் (படிவம் k) திருத்தப்பட்டது. இவ் விண்ணப்பப்படிவத்தில் பகுதி 20 இல் விண்ணப்பதாரி கையொப்பமிடுதல் வேண்டும். விண்ணப்பதாரியின் பிரகடனம் அடங்கிய பகுதியில் விண்ணப்பதாரியின் கையொப்பம் இன்றி எந்தவொரு விண்ணப்பத்தையும் பொறுப்பேற்கக் கூடாது. திருத்தப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவம் (படிவம் k) இணைப்பு ‘A’ ஆக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. (இத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, தொடரறா முறை மூலமாகவும் இவ் விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்).
(ஆ) கைவிரல் அடையாளத்தைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்களைத் தெளிவூட்டும் விசேட அறிவுறுத்தல் குறிப்பை ஒவ்வொரு விண்ணப்பதாரிக்கும் விநியோகித்தல் வேண்டும். இவ் அறிவுறுத்தல் பத்திரம் இணைப்பு ‘B’ ஆக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
(இ) இதற்கமைய வெளிநாட்டுத் தூதரகங்கள் தமது இணையத் தளங்களை இற்றைப்படுத்துவதற்கு சிபாரிசு செய்யப்படுகின்றது.
(<) jpUj;jpaikf;fg;gl;l flTr;rPl;L tpz;zg;gg; gj;jpuq;fspd; (gbtk; ‘K’- I.M. 35) fljhrp efy;fs; rfy ntspehl;L J}jufq;fSf;Fk; J}juf topKiwfspD}lhf mDg;gpitf;fg;gLk;.
4. விமான நிலையங்களூடாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்:
(அ) வெளிநாட்டுத் தூதரகங்களினூடாக விண்ணப்பித்து கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொண்ட நபர்கள் இலங்கைக்கு வருகை தரும் முதலாவது சந்தர்ப்பத்தில், குடிவரவு, குடியகல்வு கருமபீடத்திற்குச் சென்று நேரடியாகவே பிரதான குடிவரவு உத்தியோகத்தரிடம் அறிவிப்புச் செய்யலாம். அவ்வாறில்லையெனில், குடிவரவு, குடியகல்வு கருமபீடத்திற்குச் சென்று குடிவரவு, குடியகல்வு உத்தியோகத்தரின் ஆலோசனைக்கு அமைய பிரதான குடிவரவு உத்தியோகத்தரிடம் அவர்களை முன்னிலைப்படுத்துதல் வேண்டும். பின்னர் பிரதான குடிவரவு உத்தியோகத்தரினால் தனியான குறிப்பிலக்கமொன்றுடன் கூடிய தன்னியக்கமாக பிறப்பிக்கப்படுகின்ற (System generated) உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் படிவமொன்று (BDA Form) இரண்டு பிரதிகளைக் கொண்டதாக விநியோகிக்கப்படும். அவற்றுள் ஒன்று, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் சமர்ப்பிப்பதற்காக அந்நபருக்கு விநியோகிக்கப்படும். இந்த உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் படிவம் (BDA Form) இணைப்பு ‘C’ ஆக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
(ஆ) விமான நிலையத்தில் உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான வசதிகள் காணப்படுவதில்லை என்பதால், அவர்கள் உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்கு வருகை தருதல் வேண்டும்.
5. இலங்கைக்குள் பிரவேசித்ததன் பின்னர் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்:
(அ) உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு அல்லது திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களுள் ஒன்றிற்கு வருகை தரலாம். இதற்காக விசேட கருமபீடமொன்று வெளிநாட்டுத் தூதரகக் கிளையில் நிறுவப்படும் என்பதுடன், இதற்காக எந்தவொரு கட்டணமும் அறவிடப்பட மாட்டாது.
(ஆ) அநாவசிய தாமதங்களைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில், திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக திகதியொன்றையும், நேரத்தையும் ஒதுக்கிக் கொள்வதற்கு ஏதுவாக, தொடரறா முறை (Online) மூலம் இதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
(இ) உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொடுத்ததன் பின் உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறை பூர்த்தியடைந்ததை அத்தாட்சிப்படுத்தும் வகையில் தன்னியக்கமாக பிறப்பிக்கப்படுகின்ற (System generated) பற்றுச்சீட்டொன்று திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் என்பதுடன், முறையாக உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொடுத்த நபர்களுக்கு எந்நேரத்திலும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு ஏதுவாக எல்லைக் கட்டுப்பாட்டு முறைமை இற்றைப்படுத்தப்படும். உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை மேற்கொண்டு முடிப்பதற்காக செலவாகும் காலம் சுமார் 45 நிமிடங்களாகும்.
(ஈ) உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறை காரணமாக, ஏற்கனவே பாவித்து வரும் கடவுச்சீட்டில் அடங்கியுள்ள தகவல்களில்/ விபரங்களில் எந்தவொரு மாற்றமும் ஏற்படாது.