பிறப்பு பதிவுக்கான புதிய திருத்தங்கள் (தமிழ்)

இலங்கை பெற்றோர்களுக்கு, வெளிநாடொன்றில் இடம்பெறும் குழந்தை பிறப்பொன்றை வெளிநாட்டுத் தூதரகத்தில் பதிவு செய்வதற்கு  தேவையான ஆவணங்கள்.


•    ஆங்கில பெரிய எழுத்தில் முறையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பபடிவத்துடன், விண்ணப்பதாரி (பிறந்த குழந்தையின் தந்தை அல்லது தாய்) பிற நாடொன்றில் குடியுரிமை பெறவில்லை என்ற பிரகடனம் (குறித்த விண்ணப்ப படிவம் (www.srilankaembassy.fr) என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் (download) செய்ய முடியும்.

•    ஆங்கில பெரிய எழுத்தில் முறையாக பூரணப்படுத்தப்பட்ட குழந்தையின் பிறப்பு தொடர்பான விண்ணப்ப படிவம்.
(மூன்று மாதங்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படின் 16ம் பிரிவையும் 
மூன்று மாதங்கள் கடந்திருப்பின் 24ம் பிரிவையும் பூரணப்படுத்தவும்) 

முறையாக பூரணப்படுத்தப்படட விண்ணப்ப படிவத்துடன் கீழ் குறிப்பிடப்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
(ஒரு வருடத்திற்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படின் (01) போட்டோ பிரதியும் ஒரு வருடம் கடந்திருப்பின் (02) போட்டோ பிரதிகளும் சமர்பிக்கப்படல் வேண்டும்.

1.    பிரான்ஸ்/ஸ்பெய்ன்/போர்த்துக்கல்  அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் வழங்கப்பட்ட  குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் அதனது ஆங்கில மொழிபெயர்ப்பு. (மூலப்பிரதியுடன் (original)  புகைப்பட பிரதிகள்(photocopies).    

2.    பெற்றோர்களின் இலங்கைப் பிறப்பு சான்றிதழ்கள். (மூலப்பிரதியுடன் (original) புகைப்பட பிரதிகள் (photocopies).      (*ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது).
ஒரு வேளை பெற்றோரில் ஒருவர் பிறிதொரு நாட்டு பிரஜையாயின் சம்பந்தப்படட நாட்டினால் வழங்கப்பட்ட  பிறப்பு சான்றிதழ் மற்றும் அதனது ஆங்கில மொழிபெயர்ப்பு (மூலப்பிரதியுடன் (original) புகைப்பட பிரதிகள் (photocopies).

3.    பெற்றோர்களின் விவாகச்சான்றிதழ். (மூலப்பிரதியுடன் (original)  புகைப்பட பிரதிகள்(photocopies).    
a)    பெற்றோர்கள் இலங்கையில் விவாகமானவர்களாயின் தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட விவாகச்சான்றிதழ். (* ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது).
b)    பெற்றோர்கள் வெளிநாடொன்றில் விவகமாகியிருப்பின் அந்நாட்டு தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட விவாகச்சான்றிதழ் மற்றும் அதனது ஆங்கில மொழிபெயர்ப்பு. (மூலப்பிரதியுடன் (original) புகைப்பட பிரதிகள் (photocopies).

4.    ஒரு வேளை பெற்றோர்கள் விவகமாகாதவர்களாயின், குழந்தையின் தந்தை எனப்படுபவர்,  தானே குழந்தையின் தந்தை என உறுதிப்படுத்தும் வகையில் சமர்ப்பிக்கும் பிரகடனம்.  இதன்போது சம்பந்தப்பட்ட  தாய் தந்தை இருவரும் தூதரகத்திற்கு சமூகமளித்து பிறப்பு தொடர்பான விண்ணப்ப படிவத்தின் (16/24) 10ம் பிரிவில் சம்பந்தப்படட அலுவலர் முன்னிலையில் கையொப்பமிடல் வேண்டும்.  
 
5.    குழந்தை பிறந்தபோது செல்லுபடியான பெற்றோர்களது கடவுச்சீட்டு மற்றும் விசா அனுமதி பத்திரம். (புகைப்படப்பிரதிகள்)

6.    தற்போதைய செல்லுபடியான பெற்றோர்களது  இலங்கை கடவுச்சீட்டு மற்றும் விசா அனுமதி பத்திரம். (மூலப்பிரதியுடன் (original) புகைப்படபிரதிகள் (photo copies). 

7.    பிரதான விண்ணப்பதாரி, குழந்தை பிறந்தபோது செல்லுபடியான விசா அனுமதி பத்திரத்தை பெற்றிருக்காவிடின், குழந்தை பிறந்தபோது தனது  செல்லுபடியான இலங்கை கடவுச்சீட்டு மற்றும் குழந்தை பிறந்தபோது பிற நாடொன்றில் குடியுரிமை பெறவில்லை என்ற பிரகடனத்துடன் மேலே  (06) குறிப்பிட்ட ஆவணங்களுடன் சமர்ப்பிக்கபடல்  வேண்டும்

8.    பிரதான விண்ணப்பதாரி  குழந்தை பிறந்தபோது இலங்கை பிரஜையாக இருந்து தற்போது பிரென்ச் குடியுரிமையை பெற்றிருப்பின், பிரென்ச் குடியுரிமைக்கான சான்றிதழ் (NATURALISATION CERTIFICATE)  மற்றும் அதனது ஆங்கில மொழிபெயர்ப்பு சமர்ப்பிக்கபடல்  வேண்டும்.  (மூ

9.    லப்பிரதியுடன் (original) புகைப்படபிரதிகள் (photo copies). 

10.    பிரதான விண்ணப்பதாரி (தாய்/தந்தை) இலங்கைக்கு வெளியில் பிறந்திருந்தால், அவருடைய  இலங்கைப் பிறப்பு சான்றிதழுடன் பிரஜாவுரிமை சான்றிதழ் சமர்ப்பிக்கபடல் வேண்டும். (மூலப்பிரதியுடன் (original) புகைப்படபிரதிகள் (photocopies). (*வெளிநாட்டு பிறப்பு சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது).

11.    பிரதான விண்ணப்பதாரி  இரட்டை பிரஜாவுரிமை பெற்றிருந்தால் அவருடைய இரட்டை பிரஜாவுரிமை சான்றிதழ் சமர்ப்பிக்கபடல்  வேண்டும்.  (மூலப்பிரதியுடன் (original) புகைப்பட பிரதிகள் (photocopies).

12.    குழந்தை பிறந்து மூன்று மாதத்திற்குள் பிறப்பு பதிவு செய்யமுடியவில்லையெனில் தாமதத்திற்கான காரணம் தெரிவித்து கடிதம் சமர்ப்பிக்கபடல்  வேண்டும்.

13.    ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கலில் இருந்து விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரிகள் மேலே கூறப்பட்ட ஆவணங்களின் போட்டோபிரதிகளை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட எதாவது நிறுவனங்களின் உரிய அதிகாரியினால் (மருத்துவர்/சட்டவல்லுனர்) இரப்பர் முத்திரையிடப்பட்டு உண்மைப் பிரதியென உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க முடியும்.  மேலும் விண்ணப்பதாரியின் கையொப்பம் விண்ணப்பபடிவத்தின் பொருத்தமான சகல  இடங்களிலும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் முன்னிலையில் இடப்பட்டு உறுதிப்படுத்தப்படல் வேண்டும்  

14.    பிறப்பையும் பிரஜாவுரிமையையும் பதிவு செய்வதற்கான கட்டணம் € 87 (யூரோ).  பதிவு செய்ய தாமதிக்கும் ஒவ்வொரு வருட தாமதத்திற்க்கும் மேலதிகமாக € 8.00 (யூரோ) வீதம் தண்டப்பணமாக  அறவிடப்படும்.  (தபால் மூலம் விண்ணப்பிக்கும்  விண்ணப்பதாரிகளுக்கு  மேலே கூறப்பட்ட கட்டணத்துடன் தபால் கட்டணமாக €10 (யூரோ) அறவிடப்படும்,

கவனிக்க: 
விண்ணப்பதாரியின் கையொப்பம் தமது கடவுச்சீட்டில்  உள்ளதை ஒத்திருத்தல் வேண்டும். 

மேலே (04) இல் குறிப்பிட்டது தவிர்ந்த மற்றைய சந்தர்ப்பங்களில் விண்ணப்பதாரி மட்டும் சமூகமளிக்கலாம். 

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முன்னதாக இலக்கங்களை பெற்றுக்கொள்ளுமாறு விண்ணப்பதாரிகள் தயவுடன்  வேண்டப்படுகிறீர்கள். ஒரு நாளைக்கு (05) இலக்கங்கள் மட்டுமே வழங்கப்படும்.

முறையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவங்களை நண்பகல் 12.00 மணிக்கு முன்னதாக உரியகரும பீடத்தில் சமர்ப்பிக்குமாறு தயவுடன் வேண்டப்படுகிறீர்கள்.